தமிழகத்தில் மழையளவு குறைவதால், நிலத்தடி நீர் மட்டமும் குறைகிறது. இதே நிலை நீடித்தால் விவசாய உற்பத்தி குறையும். இதை கருத்தில் கொண்டு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ஆண்டுக்கு ரூ.ஐந்தாயிரம் கோடி வீதம், ஐந்தாண்டுகளில் செயல்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ரூ.183 கோடி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர், திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் பணி மேற்கொள்ள வேண்டும். ஒரு வேளாண் வட்டத்தில் குறைந்தது 50 ஏக்கர் நிலம் ஒரே பகுதியில் தேர்வு செய்ய வேண்டும். இந்நிலம், அதிகபட்சம் 12 விவசாயிகளுக்கு மேற்பட்ட நிலமாக இருக்கலாம். மூன்று வட்டத்தில் குறைந்தது 150 ஏக்கர் முதல் 200 ஏக்கர் நிலம் வரை தேர்வு செய்யலாம்.தேர்வான நிலம், வேளாண் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். நிலத்தில் குழாய்கிணறு அமைத்து, பழமரக் கன்றுகள், நெல்லி, மூலிகை மரக்கன்று, சவுக்கு, தைல மரக்கன்று போன்றவை நட்டு முறையாக பராமரிக்கப்படும். நிலம் அடர்ந்த தோப்பாக மாறியபின், விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்.ஆரம்பத்தில், தரிசு நிலத்தில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்த முடிவானது. புஞ்சை நிலத்திலும் திட்டத்தை செயல்படுத்த வேளாண் துறை முடிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்குள், திட்டத்தை செயல்படுத்தி நிதியை செலவிட வேண்டும். இல்லையெனில், அந்நிதி அடுத்த ஆண்டு கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.திட்டத்தை செயல்படுத்த வேளாண்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. விவசாயிகள் ஒத்துழைப்பு போதிய அளவில் இன்மையால் திட்டத்தை செயல்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது பற்றி விவசாயிகள் கூறியதாவது:விளைநிலத்தை தோப்பாக மாற்றும் திட்டத்தால், ஆண்டுக்கு ஒருமுறை அதுவும் சீசன் காலத்தில் அறுவடை நடக்கும். அதில் குறைவான வருவாய் தான் கிடைக்கும். மழை கை கொடுக்கும் பட்சத்தில், மண் வளத்துக்கு ஏற்ப மானாவாரி பயிர் செய்தால் ஒரளவு லாபம் பார்க்கலாம்.நிலம் தோப்பாகி விட்டால், விவசாயிகள் அன்றாட உணவுக்கான காய்கறிகள் முதல், கால்நடை தீவனம் வரை அனைத்தையும் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இத்திட்டத்துக்கு, தரிசு நிலத்தையே தராதபோது, புஞ்சை நிலத்தை கொடுக்க வாய்ப்பில்லை.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.தமிழகத்தில் தேர்வு செய்த ஒன்பது மாவட்டத்திலும் இதே நிலை நீடிப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Monday, February 4, 2008
வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பின்னடைவு : விவசாயிகள் ஒத்துழைப்பு இன்மையால் அதிர்ச்சி - தினமலர்
விவசாயிகள் ஒத்துழைப்பு இன்மையால், தமிழகத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வணக்கம். உங்களின் முயற்சியைக் கண்டு மகிழ்கிறேன். நான் வேளாண் அறிவியலில் இளநிலைப் பட்டம் இந்தியாவிலும், முதுநிலை ஆராய்ச்சிப் பட்டம் கனடாவிலும் கற்றுள்ளேன். இந்தியாவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் மூன்றாண்டு காலம் பணியாற்றி விட்டு தற்பொழுது ஒரு வேளாண் ஆராய்ச்சி மென்பொருள் உருவாக்கும் ஒரு நிறுவனத்தில் கனடாவில் பணியாற்றி வருகிறேன். உங்களுக்கு என்னால் ஆன எல்லா உதவிகளையும் அளிக்க ஆர்வமாயிருக்கிறேன். உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்.

நண்பா ராஜ்,
உங்களுடைய அறிவுரைகள், திட்ட மிடுதலின் போது கட்டாயம் தேவை...
மிக்க நன்றி....
மிக நல்ல முயற்சி!!
உங்களின் இந்த பதிவுக்கு என் பாராட்டுகள்!!
தொடர்ந்து நல்ல பதிவுகள் தந்து இந்த வலைப்பூ மேலும் மேலும் உபயோகமானதாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :-)
Post a Comment