இந்தியாவின் இதயம் கிராமம்.
இந்தியர்களின் தேசியத் தொழில் விவசாயம்.
அடடா...
ஒரு புறம் மாதம் 30,000 ரூபாய் வாங்கும் IT Engineer...
மறுபுறம் வருடம் முழுவதும் உழைத்தும்,
விதை நெல்லுக்கு தாலியை அடகு வைக்கும் அவலம்...
தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்...
விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...
நல்லது. இதனை எப்படி சாதிக்கப் போகிறோம்? என்னை விட இந்த விசயத்தை மிக நல்ல முறையில் பல பேர் அணுகியிருக்கலாம். ஆனாலும், எனக்கு தோன்றியதை சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.
1. விவசாயம் பெரும் பாலும் பாதிக்கப் படுவது மழை பொய்ப்பதும், புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீரழிவுகளாலும்தான். இந்த எதிர்பாரத விளைவுகளை, நஷ்டத்தை காப்பீடு (Insurance) செய்வதன் மூலம் தவிர்கலாம். இதனை பற்றிய ஒரு விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.
2. வேளாண்மை பல்கலைகழகங்களில் நடக்கும் ஆராய்ச்சியின் பயன், விவசாயியை சென்றடைய வேண்டும்.
3. பல்வேறு பணப்பயிர் (மூலிகை, ஆமணக்கு மற்றும் பிற ஏற்றுமதிக்கு உரிய பயிர்கள்) பற்றிய விவரங்கள் கிடைக்க வேண்டும்.
4. கிராமம் தோறும், விளை பொருட்களை விவசாயின் நேரடி விற்பணைக்கு எடுத்துச் செல்ல, தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
5. ஒருங்கிணைந்த ஏற்றுமதி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும்
6. ஆண்டு முழுவதும் வருமானம் வரும்படி, ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பு முறைகளில் அறிவியல் கலந்த, அதிகம் பலன் தரக் கூடிய முறைகளை நடைமுறைப் படுத்த வேண்டும்.
இவை அனைத்திற்கும் மேலாக, ஒரு கிராமத்தை தத்து எடுத்து, சோதனை முறையில் செயல் படுத்தி, சாதனையாக்க வேண்டும்.
இதன் முன்னோட்டமாக, வரும் ஜுலை மாதம், முதன் முறையாக, வயல் (தோப்பு/காடு) வாங்குவதற்கு தயாராகி வருகிறேன்.
இங்கு, அமெரிக்காவில், அனைத்துமே நடைமுறையில் உள்ளது.
விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...
ம்ம்... அது அவ்வளவு சுலபமா? இது என்ன ரஜினி படமா? ஒரு பாட்டு முடியற நேரத்துல சாதிக்கிறதுக்கு...
ஆனா எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுதே... முடியும்னு...
ஈ.வே.இராமசாமி என்ற ஒரு தனி மனிதனின் மனதில், இந்த சமுதாய பொய்மைகளை கண்டு உருவான ஒரு தீப்பொரி தானே நமக்கு தந்தை பெரியாரை அடையாளம் காட்டியது, மூட நம்பிக்கைகளை சுட்டு பொசுக்கியது,
மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்ற சாதாரண மனிதனுக்கு ஏற்பட்ட அவமானமும், அதனை தொடர்ந்து எழுந்த விடுதலை வேட்கையும், நமக்கு உலகமே கொண்டாடும் மாகாத்மா காந்தியை அடையாளம் காட்டியது. அஹிம்சையின் வலிமையை எடுத்து சொன்னது...
இதோ... இங்கு நான் மட்டும் இல்லை... இதை படிக்கும், நீங்களும் இணையும் போது, ஏன் முடியாது?
Friday, January 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
தஙகள் முயர்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
Best wishes for your try.
I would like to contribute something for it
Hi Lakshmanan and சதுக்க பூதம், Thank you so much...
செல்லம்மாள், ரெம்ப உணர்ச்சிவசப்படாதீங்க!! எங்கள் குடும்பத்தொழில் விவசாயம் தான் எனது அனுபவங்களை உங்களுக்கு கூற கடமைப்பட்டுள்ளேன்...
//
1. விவசாயம் பெரும் பாலும் பாதிக்கப் படுவது மழை பொய்ப்பதும், புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீரழிவுகளாலும்தான். இந்த எதிர்பாரத விளைவுகளை, நஷ்டத்தை காப்பீடு (Insurance) செய்வதன் மூலம் தவிர்கலாம். இதனை பற்றிய ஒரு விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.
//
தங்கள் கருத்து மற்றிலும் தவறான ஒன்று. விவசாயத்திற்கு முக்கிய பிரச்சனை நீர் இல்லாதது தான்!! மழை என்பது விவசாயிகளின் கனவு... பயிர்களை சேதப்படுத்துமளவு மழை பெய்து வெள்ளம் வருவது 10 வருடங்களுக்கு ஒரு முறை நடப்பது. வரட்சியால் பயிர்கள் நாசமாவது வருடா வருடம் நடப்பது! மழைநீரை சேமிப்பதுதான் நல்ல விவசாயத்திற்கு அடிப்படை. வெள்ளங்களால் பாதிக்கப்படும் நிலங்கள் பெரும்பாலும் தாழ்வான பகுதிகளில் இருக்கும். இப்படிப்பட்ட இடங்கள் ஆற்றங்கறைகள், ஏரிகள், குளங்களை ஆக்ரமித்து விவசாயம் செய்யப்படுபவை. இதற்கெல்லாம் Insurance கொடுப்பார்களா என்பது கேள்விக்குறிதான்!
விவசாயிகளின் இன்னொரு முக்கிய பிரச்சனையான வேளையாள் பஞ்சம்(Scarcity of Labor) பற்றி நீங்கள் பேசவேயில்லை.
//
கிராமம் தோறும், விளை பொருட்களை விவசாயின் நேரடி விற்பணைக்கு எடுத்துச் செல்ல, தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
//
விவசாயிகள் விளை பொருட்களை நேரடியாக விற்பனைக்கு எடுத்துச்சென்றால் கிடைக்கும் லாபத்தின் அளவு மிகவும் சொற்பமாகும். இந்த சொற்ப லாபத்தை பெறுவதற்காக அவர்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது... அதற்காகவே இவர்கள் இடைத்தரகர்களிடம் விற்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.
நண்பர் கருப்பா,
மிகச் சிறந்த பின்னூட்டம். அருமையான விமர்சனம். தங்களுடய உதவி கட்டாயம் தேவை... எனது பதில்களை இங்கு பதிக்கிறேன்... குறை இருப்பின், கட்டாயமாக சுட்டிக் காட்டுங்கள்..
////// கருப்பர் கூறியது...---> தங்கள் கருத்து மற்றிலும் தவறான ஒன்று. விவசாயத்திற்கு முக்கிய பிரச்சனை நீர் இல்லாதது தான்!! மழை என்பது விவசாயிகளின் கனவு... பயிர்களை சேதப்படுத்துமளவு மழை பெய்து வெள்ளம் வருவது 10 வருடங்களுக்கு ஒரு முறை நடப்பது. வரட்சியால் பயிர்கள் நாசமாவது வருடா வருடம் நடப்பது! மழைநீரை சேமிப்பதுதான் நல்ல விவசாயத்திற்கு அடிப்படை. வெள்ளங்களால் பாதிக்கப்படும் நிலங்கள் பெரும்பாலும் தாழ்வான பகுதிகளில் இருக்கும். இப்படிப்பட்ட இடங்கள் ஆற்றங்கறைகள், ஏரிகள், குளங்களை ஆக்ரமித்து விவசாயம் செய்யப்படுபவை. இதற்கெல்லாம் Insurance கொடுப்பார்களா என்பது கேள்விக்குறிதான்! ///////////
எனது பதில்...
1. நண்பரே, மழை அதிகம் பெய்து வெள்ளம் வந்தாலும் அல்லது மழை பொய்த்தாலும் காப்பீடு உங்களுக்கு கை கொடுக்கும். இப்பொழுது, காப்பீடு என்பது மழை அளவினை குறியீடாகக் கொண்டு வழங்கப் படுகிறது. எனவே, நீங்கள் காப்பீடு செய்வதன் மூலம், இரண்டு பிரச்சனைகளிலிருந்தும் பாது காத்துக் கொள்ளலாம்.
2. ஆற்றங்கறைகள், ஏரிகள், குளங்களை ஆக்ரமித்து விவசாயம் செய்யப்படுவது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத சமுதாயக் குற்றம் ஆகும். அவர்களை விவசாயி என்று சொல்வதை விட தீவிரவாதிகள் என்று சொல்லலாம். இது பசிக்காக, தனது சதையையே தின்னும் அவலம்.
////// கருப்பர் கூறியது...---> விவசாயிகளின் இன்னொரு முக்கிய பிரச்சனையான வேளையாள் பஞ்சம்(Scarcity of Labor) பற்றி நீங்கள் பேசவேயில்லை. ///////////
எனது பதில்...
1. வேளையாள் பஞ்சத்திற்கு காரணம், விவசாயம் நட்டப்படும் தொழிலாகவும், வருடம் முழுவதும் வேலை தர முடியாத தொழிலாகவும் இருப்பது தான். ஒரு கூட்டு பண்ணைமுறை விவசாயம் ஏற்படும் போது, அமெரிக்காவினைப் போல, நமது ஊரிலும் விவசாய கருவிகளை குறைவான வாடகையில் கிடைக்கச் செய்யலாம். மேலும், விவசாயம் லாபமான தொழிலாக மாறும் பட்சத்தில், மீண்டும் வேலை ஆட்கள் வருவார்கள். இது கனவு தான். ஆனால், ஒரு நாள் சாத்தியப் படும்.
////// கருப்பர் கூறியது...---> கிராமம் தோறும், விளை பொருட்களை விவசாயின் நேரடி விற்பணைக்கு எடுத்துச் செல்ல, தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
//விவசாயிகள் விளை பொருட்களை நேரடியாக விற்பனைக்கு எடுத்துச்சென்றால் கிடைக்கும் லாபத்தின் அளவு மிகவும் சொற்பமாகும். இந்த சொற்ப லாபத்தை பெறுவதற்காக அவர்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது... அதற்காகவே இவர்கள் இடைத்தரகர்களிடம் விற்பதை ஏற்றுக்கொள்கின்றனர். ///////////
எனது பதில்...
1. இது நிதர்சனமான உண்மை. இதற்கான மாற்று வழிகள் பற்றிய தகவலை சேகரிக்க ஆரம்பித்துள்ளேன். கூடிய விரைவில், திட்ட அறிக்கையில் சமர்பிப்பேன்.
அனைவருக்கும் வணக்கம்,
என்னுடைய ஆதங்கம் இங்கே பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இப்போது இரண்டு விதமான முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.
1. விவசாய கூலி என்பதை விவசாயி என மாற்றுதல்.
இதில் தற்பொழுது சுமார் 250 விவசாய கூலி குடும்பங்கள் உள்ளன முழு வெற்றிக்கு இன்னும் ஐந்தாண்டுகள் ஆகும் என நினைக்கிறேன்.
2. படித்த இளைஞ்சர்களை ஒருங்கிணைத்து விவசாயம் மற்றும் விவசாய சார் தொழில்களை ஊக்குவித்தல்.
இதில் தற்பொழுது பன்னிரண்டு அங்கத்தினர் உள்ளனர்.
இந்த இரண்டு முயற்சியும் வெற்றிபெற அனைவரது ஆலோசனையும் எதிர்நோக்கி உள்ளேன்.
விவசாயம் லாபம் மிக்க தொழில் என்பது முற்றிலும் உணமை...
விவசாயம் சார்ந்த செய்திகள், தகவல்கள் மற்றும் விவசாயம் சார்ந்த ஆன்லைன் சேவைகளை தமிழில் தினம் தினம் வழங்கும் விவசாய ஊடக வலைதளம் சென்று பாருங்கள்.
www.agriinfomedia.com
nearly two years passed. what progress made
Thank you so much to check the status with me. I am yet to buy the form in India. I couldn't make a trip to India for the past 1.5 years. I will be starting this project soon. Mean while, I just sponsered an Agro Project Award. Please check this link in my blog.
Hai,
I am munish i am working in an MNC in Chennai. i wish to do Agriculture but i am new to this field so help me.
Munish what type of help do you want?
அன்பு நண்பர்களே விசாயத்துக்கான காப்பீடு இருக்கிறது ஆனால் அது சிறிய விவசாயிகளை சென்று அடைவதில்லை . பெரிய பணக்கார விவசாயிகளுக்குத் தான் பலன் கொடுக்கும் . அதுவும் அந்த கிராமம் முழுவதும் பாதிக்கப் பட்டு இருக்கணும் . எல்லா வற்றுக்கும் மேலாக ஊழல் அதிகாரிகள் விவசாயிகள் மேலே கருணை காட்டனும் . இது நடக்குமா ? அப்ப சாமி ய யாருமே கும்பிட மாட்டாங்க
ராமநாதன்
Post a Comment