Sunday, February 10, 2008

நெஞ்சு பொருக்குதில்லையே... காத்தி மாங்கனுடன் (Mangan, Kathy J) நேர்காணல்

தகவல் திரட்டுதலின் ஒரு பகுதியாக, என்னோட வேலை பார்க்கிற காத்தி மாங்கனுடன் (Mangan, Kathy J) ஒரு இருபது நிமிடத்திற்கும் மேலாக அமெரிக்க வேளாண்மையை பற்றி பேசுவதற்கு நேரம் கிடைத்தது.அவருடன் நடந்த நேர்காணல் சுருக்கம் உங்களுக்காக...

*******************************************************

செந்தில் செல்லம்மாள் - இந்த மடிசன் சிட்டிக்கு பக்கத்துல ஏதாவது விவசாய கிராமம் இருக்குதா? எனக்கு இந்த அமெரிக்காவில எந்த மாதிரியான விவசாய முறைய கடைப்பிடிக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆசைபடறேன்.

காத்தி - hey... it is interesting. You know, எங்க அப்பா, அம்மா கூட விவசாயம் தான் பார்த்தாங்க. கொஞ்சம் சிறிய விவசாயி ...

செசெ - ரொம்ப நல்லதா போச்சு. இப்போ என்ன வெள்ளாமை நடக்குது?

காத்தி - இப்போ எதுவும் வெள்ளாமை பண்றது இல்லை. You Know, இப்போ இங்க பெரிய நிறுவனங்கள் (Corporate) விவசாயத்துல இறங்கிட்டதால, சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளால போராட முடியல. அதனால, எங்க அப்பாவும் நிலத்த வித்துட்டார். அந்த சமயத்துல நாங்க ரொம்ப கஷ்டப் பட்டோம்.

காத்தி - நாங்க விவசாயம் பார்த்த போது நல்லா இருந்தோம். எங்க வீட்ல பசு மாடு, பன்றி மற்றும் கோழி எல்லாம் இருந்தது. நிலத்தை வித்த பின்னாடி, எங்களோட வருமானம் போய், வாழ்றதுக்கு கொஞ்சம் சிரமப் பட்டோம்.

செசெ - நிலம் வித்த பணத்தை என்ன பண்ணுனீங்க? நிறைய பணம் கிடைச்சுருக்குமே?

காத்தி - அந்த பணம், நாம் வருடக் கணக்கில் வேலை பார்க்கிறதுக்கு ஈடாகாது... நம்ம வாழ்க்கை ஆதாரத்துக்கு பயன் தராது...

செசெ - இந்த பிரச்சணை உங்களுக்கு மட்டும் தானா?

காத்தி - இல்லை. நாடு முழுக்கவே, பெரிய நிறுவனங்கள் தான் விவசாயத்துல ஈடு பட்டுருக்கு.

செசெ - இதனால, சில முதலாளிகள் மட்டுமே பலன் பெருவர். பெரும்பாலான மக்கள் வேலை இல்லாமல், அவர்கள் மேலும் ஏழை ஆவர்களே...

காத்தி - நீ சொல்வது சரியே... அது தான் இங்க நடக்குது.... We need a change...

செசெ - நன்றி.... சொல்லிவிட்டு கிளம்பினேன்...

*********************************************************************

நண்பர்களே, ரிலையன்சு அம்பானி பிரதர்ஸ் 1000 கோடியில் வீடு கட்டும் சமுதாயத்தில், குப்புசாமி கட்டிக் கொள்ள ஒரு வேட்டி கூட இல்லாமல் கோவணாண்டி ஆவது சரியில்லை... அதுக்காக, ரிலையன்சிடமிருந்து பணத்தை வாங்கி குப்புசாமிக்கு குடுக்கணும்னு "கம்யூனிஷம்" பேசல.. ஆனால், குப்புசாமியின் விவசாய தொழிலை லாபகரமானதாக ஆக்கலாம்...

கடன் தள்ளுபடி, இலவச சாப்பாடு, பிரியாணி (அந்த அரசியல் கோமாளித்தனத்தை நான் மறக்க வில்லை...மன்னிக்கவும் இல்லை...) போன்ற எலும்பு துண்டை போடாமல், விவசாயத்தை லாபகரமான தொழிலாக்கிட நிரந்தர தீர்வு தேவை...

இந்தியாவிலும் இந்த மாதிரியான ஒரு நிலைக்கு ஆளாக்காமல், விவசாயத்தை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு லாபகரமானதாக்க வேண்டும்...

ரிலையன்சு போன்ற பெரும் நிறுவனங்கள் போட்டிக்கு வரும் முன் இதை செய்தாக வேண்டும்...

உங்களுடைய கருத்துக்களை பதித்து செல்லுங்கள்... Please.

6 comments:

சதுக்க பூதம் said...

உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய பதிவு. அமெரிக்காவிலாவது, விவசாயத்தை நம்பி இருப்பவர்கள் மிகவும் குறைவு. அவர்கள் அனைவரும் விவசாயத்தை விட்டு விட்டு மற்ற தொழிலுக்கு சென்றாலும் அவர்கள் அனைவருக்கும் எளிதில் ஒரு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்தியாவில் 60% விவசாயத்தை நம்பி உள்ளனர். அனைவரும் வேறு தொழிலுக்கு வந்தால், அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பது முடியாத காரியம்

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

சதுக்க பூதம் சார்,

மிக்க நன்றி...
இந்த வாரம் மேலும் இரண்டு விவசாயிகளை பேட்டி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.
இந்த மாத இறுதியில், உங்கள் உதவி அவசியம் தேவை...

சதுக்க பூதம் said...

என்னால் ஆன உதவியை எந்த நேரத்திலும் செய்ய வெகு ஆர்வமாக உள்ளேன். இந்த வாரம் இறுதியில் தாங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தொலைபேசியில் பேசலாம். தங்களுடைய email address என்ன?

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

நன்றி...
உங்களுடைய தொலைபேசி எண்ணை எனது மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்...

nathan.thilse@gmail.com

Anonymous said...

வணக்கம் செந்தில்... முதன்முதலாக உங்கள் வலைப்பூவை படிக்கிறேன். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். ஆனால் தீர்வு என்ன இதற்கெல்லாம்? என்னுடைய பார்வையில்......

http://kudikaaran-kootru.blogspot.com/2008/02/blog-post.html

Unknown said...

இந்தியாவிலும் இந்த மாதிரியான ஒரு நிலைக்கு ஆளாக்காமல், விவசாயத்தை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு லாபகரமானதாக்க வேண்டும்...

எனக்கும் ஒரு விவசாயியாக வேண்டும் என்ற கனவு உள்ளது....

பசுமை விகடனில் கூட நல்ல பல பயனுள்ள கட்டுரைகள் வருகின்றன...
சீரோ பட்ஜட் போன்றவை மூலம் நானும் விவசாயத்தில் விரைவில் ஈடு பட உள்ளேன்
தங்களது பணி தொடரட்டும்..